நீலகிரி : உதகையில், சுற்றுலாப் பயணிகளுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் பொங்கல் விழாவினை மிகச்சிறப்பாக கொண்டாடினார்.

உதகையில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் உதகை அரசு தாவிரவியல் பூங்காவில் சுற்றுலா பொங்கல் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சுற்றுலாப் பயணிகளுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு விளையாட்டுகளில் கலந்து கொண்டார்.
ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் கலந்து கொண்டு, புதுப்பானையில் புத்தரிசி பொங்கலிட்டுப் பொங்கலோ பொங்கல் என மகிழ்ச்சி பொங்கல் கொண்டாடினர்.

மாவட்ட ஆட்சித் தலைவர் இன்ன சென்ட் திவ்யா, சுற்றுலா அலுவலர் ராஜன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணிய சாம்ராஜ் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் புதுப்பானையில் தீ மூட்டி புத்தரிசி பொங்கலிட்டுக் கொண்டாடினர்.
சுற்றுலாப் பொங்கலையொட்டி, தாவரவியல் பூங்கா அலுவலக முன் ஊழியர்கள் போட்டிருந்த பல வண்ண கோலங்களை சுற்றுலாப்பயணிகள் பார்த்து ரசித்ததோடு செல்பி புகைப்படம் எடுத்தனர்.

சுற்றுலா பொங்கலையொட்டி பூங்காவிற்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளுக்கு சாக்கு பை பந்தயம், கயிறு இழுக்கும் போட்டி, எலுமிச்சை கரண்டி ஓட்டம் என நடத்தப்பட்ட போட்டிகளில் திரளான சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர்.