கோடநாடு விவகாரத்தில் நிஜம் பேசியிருந்தால் அதை தடுப்பது குற்றம் : கோவையில் கமல்ஹாசன் கருத்து

கோவை : கோடநாடு விவகாரம் குறித்து கோவை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.


கோவை : கோடநாடு விவகாரம் குறித்து கோவை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது ;- கட்சியின் புதிய அலுவலகம் திறக்கவும், பொங்கலைக் கிராம புற சுழலில் மக்களுடன் மக்களாகக் கொண்டாடவும் கோவை மாவட்டம் வந்திருக்கின்றேன், என்றார். இதையடுத்து, கோடநாடு விவகாரம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, முதல்வர் பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கிறது. நானும் 2.5 வருடமாக அதைத்தான் வலியுறுத்தி வருகின்றேன். எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை, என பதிலளித்தார். 

தற்போது, வெளிவந்துள்ள ஆவணப்படம் ஒரு மர்மகதையின் அடுத்த அத்தியாயமாக இருக்கின்றது. இந்தியாவில் மற்ற முதல்வர்கள் மீது இது போன்ற கொலை குற்றச்சாட்டு இல்லை எனச் சொல்ல முடியாது. ஆனால், இங்கிருப்பது நமக்கு பெருமையான விஷயமல்ல. அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் எனச் சொல்லவில்லை. ஆனால், அவர்கள் மீது சந்தேகத்தின் பேரில் ஆதாரங்கள் ஏற்கனவே நிறைய இருக்கின்றன. 

இந்நிலையில், அவைகளில் இது ஒன்றாக இருக்கக் கூடும் என நினைப்பதில் தவறில்லை. முதல்வர் மீது குற்றம் சாட்டியவர்கள் பொய் சொல்லி இருந்தால் அது குற்றம். நிஜம் பேசியிருந்தால் அதைத் தடுப்பது, அதைவிடக் குற்றம், இவ்வாறு அவர் பேசினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...