பழங்குடியின மக்களுடன் பொங்கலை கொண்டாடிய காவல்துறையினர்

கோவை : மேட்டுப்பாளையம் அருகே தமிழக - கேரள எல்லையில் உள்ள பழங்குடியின கிராம மக்களுடன் போலீசார் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

கோவை : மேட்டுப்பாளையம் அருகே தமிழக - கேரள எல்லையில் உள்ள பழங்குடியின கிராம மக்களுடன் போலீசார் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தனர். 

தமிழக கேரள எல்லையோர வனப்பகுதியில் பழங்குடியின மக்கள் வசிக்கும் முப்பதிற்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. அடர்ந்த மலைக்காடுகளில் பழங்குடியின மக்களின் ஒத்துழைப்போடு, மாவோஸ்ட்கள் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. எனவே, இங்குள்ள மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், காவல்துறை மற்றும் பழங்குடியின மக்களிடையே நல்லுறவை மேம்படுத்தவும், இப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தலைமையில் அத்திக்கடவு கிராமத்தில் நடைபெற்ற இப்பொங்கல் விழாவில், ஆயிரம் பழங்குடியின மக்களுக்கு வேட்டி, சேலை என புத்தாடைகள் பரிசாக வழங்கப்பட்டன. மேலும், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிடும் வகையில், இருசக்கர நாற்காலி வண்டிகள் வழங்கப்பட்டன. 



பின்னர், அதிரடிப்படை வீரர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் இணைந்து பாரம்பரிய முறையில் மண்பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். பொங்கல் விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. 

பழங்குடியின மக்களிடையே பேசிய காவல்துறை எஸ்.பி பாண்டியராஜன், “தொடர்ந்து காவல்துறையினரின் செயல்பாட்டிற்கு மலைவாழ் மக்கள் உதவிட வேண்டும். புதிய நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக நக்சல் தடுப்பு போலீசாருக்கு தகவல் தருவதோடு, என்றும் காவல்துறை உங்களது நண்பன் என்பதை உணர்தல் அவசியம் என்றார்”. 

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரள காடுகளில் இருந்து தமிழக பகுதிக்குள் மாவோயிஸ்ட்டுக்கள் ஊடுருவல் முயற்சிகள் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது, என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...