தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி ஆகியோர் பொங்கல் வாழ்த்து

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் பொங்கல் வாழ்த்தை தெரிவித்துள்ளனர்.


பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் பொங்கல் வாழ்த்தை தெரிவித்துள்ளனர். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தை திங்கள் முதல் நாளான பொங்கல் திருநாளில், மக்கள் அனைவரும் வேறுபாடுகளை மறந்து சகோதரத்துவத்துடன், பொங்கும் மகிழ்ச்சியை வெளிக்காட்டும் விதத்தில் கரும்பு, மஞ்சள், வாழை ஆகிய விளை பொருட்களை வைத்து, புதுப் பானையில் அரிசியிட்டு, ``பொங்கலோ பொங்கல்’’ என்று மகிழ்ச்சிக் குரலிட்டு இறைவனை வணங்கிக் கொண்டாடுங்கள் என வாழ்த்தியுள்ளார்.

மேலும் தமிழக மக்கள் அனைவருடைய இல்லங்களிலும் பொங்கட்டும் பொங்கல். இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள்! என்று தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.



பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் :- மகரசங்கராந்தி, பொங்கல் பண்டிகை, மகுபிகு, உத்திராயன் கொண்டாட்டங்களை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பல்வேறு மொழிகளில் தனித்தனியாக வாழ்த்து பதிவிட்டுள்ளார். இதில் தமிழில் அவர் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "பொங்கல் திருவிழா நன்னாளில், தமிழ்நாட்டில் எனது சகோதர, சகோதரிகளுக்கு நல்வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில், "பொங்கல் திருவிழாவுடன் – தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளையும் கொண்டாடி மகிழுங்கள் என்றும் எதிர்கால நிலத்தில், நல்லாட்சி விளையட்டும் என்றும், அதற்கான விவசாயம் இந்நாளில் தொடங்கட்டும்," என குறிப்பிட்டுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது :- கடந்து சென்ற ஆண்டு தமிழக வேளாண் பெருங்குடி மக்களுக்கு அதிர்ச்சியும், அல்லலும், துன்பமும் தந்த ஆண்டாகியபோதும், இரவு நீண்டதாக இருந்தாலும், விடியல் உறுதி என்பதைக் கட்டியம் கூறி, கிழக்கு வெளுக்கின்றது; கீழ்வானம் சிவக்கின்றது. “தை பிறந்தால் வழி பிறக்கும்”என்று தமிழர் காலம் காலமாகக் கொண்டு இருக்கின்ற நம்பிக்கைக்கு அடையாளமாக இதோ பொங்கல் நாள் புத்துயிர்ப்புடன் புலர்கின்றது, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...