கோவை : கோவையில் உரிமையாளர் திட்டியதும், கோபித்துக் கொண்ட பச்சை கிளி அம்மன் கோவிலில் தஞ்சம் புகுந்து ஒரு நாளுக்கு மேலாகியும் வெளியில் வர மறுக்கிறது.

கோவை, பாப்பநாய்க்கன் பாளையம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி முருகேசன். இவர் கடந்த ஒரு ஆண்டாகப் பச்சை கிளி ஒன்றை வளர்த்து வந்தார். இந்நிலையில், நேற்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீட்டை வெள்ளை அடிக்கும் பணியில் ஈடுபட்ட போது, அதற்கு இடையூறாக சுற்றி வந்த கிளியை முருகேசனின் மகன் திட்டி உள்ளார்.
இதனால், கோபம் அடைந்த கிளி வீட்டில் விட்டு பறந்து சென்றது. இதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேடியும் கிளி கிடைக்கவில்லை. இதனிடையே, கோபித்துக் கொண்ட கிளி அருகேயுள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில் தஞ்சம் அடைந்தது. மாரியம்மன் சிலை மீது ஏறி அமர்ந்த கிளி அவ்விடத்தை விட்டு நகராமல் அதன் மீது அமர்ந்து உள்ளது. கோவில் பூசாரி அம்மன் சிலையை அலங்கரிக்கும் போது, கிளி கோவில் மண்டபத்திற்குச் சென்றுள்ளது. அதன் பின், மீண்டும் அம்மன் சிலையின் வலது தோள்பட்டை மீது வந்தமர்ந்தது.
இது குறித்து அறிந்த முருகேசன் குடும்பத்தினர் வந்து, கிளையை அழைத்த போதும் கூட செல்லாமல் சிலை மீதே அமர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கோவில் பூசாரி ஹரிபிரசாத் கிளிக்கு தேவையான மிளகாய், கொய்யா உள்ளிட்ட உணவுகளை வைத்து உள்ளார். ஒரு நாளுக்கு மேலாகியும், அம்மன் சிலையை விட்டு நகர மறுக்கும் கிளியை சுற்று வட்டார பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.