அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு தகுதி தேர்வு தொடக்கம்

மதுரை : அவனியாபுரத்தில் நாளை நடைபெறவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக இன்று மாடுபிடி வீரர்களுக்குத் தகுதி தேர்வு மற்றும் காப்பீடு பதிவு செய்யப்படுகிறது.

மதுரை : அவனியாபுரத்தில் நாளை நடைபெறவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக இன்று மாடுபிடி வீரர்களுக்குத் தகுதி தேர்வு மற்றும் காப்பீடு பதிவு செய்யப்படுகிறது. 

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்றது. இதில் பல இளைஞர்கள் ஆர்வத்துடன் காத்திருந்து பதிவு செய்து கொண்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டி நாளை காலை 8 மணியளவில் தொடங்கி 4 மணி வரை நடைபெறவிருக்கிறது. 

இதையடுத்து, முதல் முறையாக மாடுபிடி வீரர்களுக்குக் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.பிரதமர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், இன்று அவனியா புரம் இளைஞர்களுக்குக் காப்பீடு செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, வீரர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டிக்கான உடல் தகுதித் தேர்வு நடைபெறுகிறது. 

இந்தத் தகுதி தேர்வில், இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதித்து, 155 சென்டிமீட்டர் உயரம், உயரத்திற்கு ஏற்ற உடல் எடை இருக்கிறதா என சோதனை செய்யப்படும். குறிப்பாக, மது அருந்தியிருக்கக்கூடாது. அறுவை சிகிச்சைகள் இன்றி உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். 

இந்த மருத்துவ சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மருத்துவப் பரிசோதனை சான்று மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் மாடுபிடி வீரர்களுக்கான அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...