பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் நாளை கோலாகலத் தொடக்கம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்க உள்ளது.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்க உள்ளது. 

முருகனின் மூன்றாம் படைவீடான, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம். இத்திருவிழாவுக்காக டிசம்பர் மாத ஆரம்பத்தில் இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக வரத் தொடங்கி விட்டனர். 

10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா நாளை காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 

இந்த திருவிழா நடைபெறும் 10 நாட்களும், வள்ளி - தெய்வானை சமேதரராய் முத்துக்குமாரசுவாமி தந்தப்பல்லக்கு, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக்காமதேனு, வெள்ளி யானை, தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும். இதன் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண நிகழ்ச்சி வரும் 20 -ம் தேதி இரவு 7.45 மணிக்கு மேல் நடக்கிறது. 

இதனைத் தொடர்ந்து, இரவு 9.30 மணிக்கு வெள்ளி ரதத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி ரதவீதிகள் உலா வரும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. பக்தர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் தைப்பூச தேரோட்ட நிகழ்ச்சி 21 -ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. 24 -ம் தேதி இரவு 7 மணிக்கு தெப்பத்தேர் உற்சவம் நடைபெறும். மேலும், இரவு 11 மணிக்கு கொடி இறக்குதலுடன் விழா நிறைவடையும். 

 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...