கோவை: கோவையில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களைத் திருடிய கொள்ளையனைத் தனிப்படை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 15 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை : கோவையில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களைத் திருடிய கொள்ளையனைத் தனிப்படை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 15 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில், இருசக்கர வாகன திருட்டு சம்பவம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த இருசக்கர வாகன கொள்ளையர்கள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்கள், மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் தங்கள் கைவரிசையைக் காட்டி வருகின்றனர். குறிப்பாக, கோவை அரசு மருத்துவமனைக்கு வருவோரின் இருசக்கர வாகனங்களைத் தொடர்ச்சியாக கொள்ளையடித்து வருகின்றனர்.
இது தொடர்பாக, காவல்துறையினர் எவ்வளவு விழிப்பாக இருந்தாலும் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர். இதையடுத்து, கோவை மாநகரக் குற்றப்பிரிவு துணை ஆணையர் பி.பெருமாள் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் குறித்து புலனாய்வு செய்யப்பட்டது. இதில், இருசக்கர வாகன திருட்டுகளில் முக்கிய குற்றவாளியான, ஈரோடு, சூரப்பட்டியைச் ச் சேர்ந்த மணியழகன் (30), என்பவரைத் தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

இதையடுத்து, மதியழகனிடமிருந்து சித்ரா பகுதியில் இருந்து திருடப்பட்ட 4 இருசக்கர வாகனங்களும், காளப்பட்டி பகுதியில் திருடப்பட்ட ஒரு இருசக்கர வாகனமும், கணுவாய் பகுதியில் திருடப்பட்ட 2 வாகனங்களும், தஞ்சாவூர் பகுதியில் 5 வாகனங்களும், பழனி பகுதியில் 3 வாகனங்களும் என மொத்தம் 15 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதன் மொத்த மதிப்பு ரூ.4 லட்சத்து 24 ஆயிரம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் இவருடன் குற்றத்தில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.