திருப்பூரில் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள் : கூடுதல் பேருந்துகள் இயக்காததால் அவதி

திருப்பூர் : பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்லும் மக்கள் கூட்டம் அதிகமானதால் திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

திருப்பூர் : பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்லும் மக்கள் கூட்டம் அதிகமானதால் திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. 

தமிழர்களின் பண்டிகைகளில் மிகவும் சிறப்பு மிக்க பண்டிகையாக திகழ்வது பொங்கல் பண்டிகையாகும். இப்பண்டிகையையொட்டி ஜன.14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் அரசு விடுமுறை. இந்நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை என தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் திருப்பூரில் பணியாற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களின் ஊர்களுக்கு செல்லத் தொடங்கினர். 

திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து, மதுரை, தேனி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், திருச்சி போன்ற பல மாவட்டங்களுக்கு செல்ல பேருந்துகள் உள்ளது. ஆனால் இந்த பொங்கல் பண்டிகையொட்டி, கூடுதலாக பேருந்துகள் இயக்காமல் பழைய நிலையிலே பேருந்துகளை இயக்கியதால் வெளியூர் செல்ல கூடிய பொதுமக்கள் கூட்டம் திரண்டது. 

இதனால், பல பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்தனர். எனவே, மக்கள் இது போன்ற முக்கிய பண்டிகை தினங்களில் பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...