பாரம்பரிய விளையாட்டு போட்டிகளுடன் ஈஷாவில் நடைபெறவுள்ள பொங்கல் விழா கொண்டாட்டம்

கோவை : தமிழ்நாடு சுற்றுலாத்துறையுடன் இணைந்து ஈஷா நடத்தும் பொங்கல் விழாவில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள், நாட்டு மாடுகளின் கண்காட்சி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

கோவை : தமிழ்நாடு சுற்றுலாத்துறையுடன் இணைந்து ஈஷா நடத்தும் பொங்கல் விழாவில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள், நாட்டு மாடுகளின் கண்காட்சி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. 

ஆண்டுதோறும் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் பல்வேறு பாரம்பரிய மற்றும் கலாச்சார விழாக்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பறைசாற்றும் பொங்கல் விழா வரும் 16 -ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இவ்விழா தமிழ்நாடு சுற்றுலாத்துறையுடன் இணைந்து நடத்தப்படுகிறது. 

இதில், சுற்று வட்டார கிராம மக்கள், ஈஷா தன்னார்வலர்கள், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர். இவ்விழா பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி மாலை 6மணி வரை நடைபெறும். இதனிடையே,விழாவின் தொடக்கத்தில் பல்வேறு கலாச்சாரம் மற்றும் மதத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து மண்பானைகளில் பொங்கல் வைக்க உள்ளனர். 

இதையடுத்து, தாராபுரத்தைச் சேர்ந்த கிராமிய கலைஞர்களின் பறையாட்டம் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா, சம்ஸ்கிருதி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் குழுவினரின் இசை நிகழ்ச்சிகளும், பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் நடைபெறும். 

மேலும், ஈஷாவில் வளர்க்கப்படும் காங்கேயம், ஆலம்பாடி, உம்பளாச்சேரி, ஓங்கோல், கிர், காங்கிரிஜ் உள்ளிட்ட 15 வகையான நாட்டு மாடுகளின் கண்காட்சியும் நடைபெறும். இறுதியாக, விழாவுக்கு வருகை தரும் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...