உதகை தீட்டுக்கல் குப்பை கிடங்கை வனத்துறையிடம் ஒப்படைக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

நீலகிரி : உதகை நகராட்சியில் சேகரமாகும் குப்பைகள் கொட்டப்படும் தீட்டுக்கல் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை அகற்றி விட்டு அந்த இடத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி : உதகை நகராட்சியில் சேகரமாகும் குப்பைகள் கொட்டப்படும் தீட்டுக்கல் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை அகற்றி விட்டு அந்த இடத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சியில் சுமார் 25 ஆயிரம் குடியிருப்புகள் மற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. நகரில் நாள்தோறும் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகள், காய்கறி கழிவுகள் உள்ளிட்ட அனைத்து வகையான குப்பைகளும் நகராட்சி மூலம் சேகரிக்கப்பட்டு வாகனங்கள் மூலம் பார்சன்ஸ்வேலி சாலையில் அமைந்துள்ள தீட்டுக்கல் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு கொட்டப்படுகிறது. 



இதையடுத்து, அங்கு மக்கும், மக்காத குப்பைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு மக்காத குப்பைகள் காந்தலில் உள்ள மையத்தின் மூலம் மறுசுழற்சி செய்யப்படுகிறது. மக்கும் குப்பைகளை கொண்டு உரம் தயாரிக்கப்படுகிறது. நாள் ஒன்றிற்கு சுமார் 15 டன் அளவிற்கு குப்பைகள் கொட்டப்படுகிறது. நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி வைப்பதற்காக தீட்டுக்கல் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தை கடந்த 1972ம் ஆண்டு ஊட்டி நகராட்சி குத்தகைக்கு வாங்கியது. 

1972 -ம் ஆண்டு முதல் இன்று வரை சுமார் 1.34 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் இங்கு குவிந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2012 -ம் ஆண்டுடன் குத்தகை காலம் முடிவடைந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் இதுவரை புதுப்பிக்கவில்லை. இதனிடையே, வார்டு பகுதிகளில் இறந்து கிடக்கும் கால்நடைகள் முறையாக புதைக்கப்படாமல், அவை திறந்தவெளியில் வீசி எறியும் சம்பவங்களும் நடக்கிறது. 



இதனிடையே, தீட்டுக்கல் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 30 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். வனத்தை ஒட்டி இக்குப்பை கிடங்கு உள்ளதால் இதன் அருகாமையில் சிறுத்தை, பறவைகள் உள்ளிட்டவற்றை காண முடியும். இதனிடைேய குப்பை கிடங்கில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுவதால் குடியிருப்புவாசிகள் பாதிப்பது மட்டுமின்றி, சுற்றுசூழல் பாதிப்புகளும் ஏற்பட்டு வருவதாக சுற்றுசூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டினார்கள். 

இதுதொடர்பாக தீட்டுக்கல் பகுதி மக்கள் சார்பில் தேசிய பசுமை தீர்பாயத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இவ்வழக்கில் விசாரணை மேற்கொண்ட பசுமை தீர்பாயம், தீட்டுக்கல் குப்பை கிடங்கில் ஊட்டி நகராட்சி குப்பைகள் கொட்டக் கூடாது. அங்கு குவிந்துள்ள குப்பைகளை அகற்றி, அந்த நிலத்தை மீண்டும் வனத்துறை வசம் ஒப்படைக்க வேண்டும். இனிவரும் காலங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து குப்பைகள் சேர்வதை குறைத்திட வேண்டும் என உத்தரவிட்டது. 

மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், தீட்டுக்கல் குப்பை கிடங்கு தொடர்பான பசுமை தீர்பாயத்தின் உத்தரவு இன்னும் மாவட்ட நிர்வாகத்திற்கு கிடைக்கவில்லை. உத்தரவு கிடைத்த பின்பு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...