கோடநாடு வீடியோ விவகாரம் : தெஹல்கா முன்னாள் ஆசிரியரை கைது செய்ய விரைந்த தனிப்படை

கோடநாடு எஸ்டேட் வழக்கு தொடர்பாக காணொளி ஆதாரம் வெளியிட்ட தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட மூன்று பேரை பிடிக்கத் தனிப்படை போலீசார் டெல்லி விரைந்துள்ளனர்.


கோடநாடு எஸ்டேட் வழக்கு தொடர்பாக காணொளி ஆதாரம் வெளியிட்ட தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட மூன்று பேரை பிடிக்கத் தனிப்படை போலீசார் டெல்லி விரைந்துள்ளனர். 

தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக டெல்லியில் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டார். எஸ்டேட் கொள்ளையில் தொடர்புடைய 5 பேர் மரணம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகக் இவர் கூறினார். மேலும், அவர், சயன் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரிடம் எடுத்த பேட்டிகளையும் வெளியிட்டிருந்தார். 



இதையடுத்து, உரிய விசாரணை நடத்தக் கோரி எதிர்கட்சிகள் உட்பட சில கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, மேத்யூஸ் மீது தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், காணொளியில் பேட்டியளித்த சயன், மனோஜ் ஆகியோர் மீதும் வழக்குப் பதியப்பட்டது. இந்த வழக்கை அ.தி.மு.க தொழில்நுட்பப் பிரிவு மாநில இணைத்தலைவர் ராஜன் சத்யா அளித்துள்ளார். 

இதையடுத்து, கோடநாடு வழக்கு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் எஸ்.ஆர்.செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி மீது அவதூறு பரப்பும் நோக்கில் காணொளி ஆதாரம் வெளியிட்ட மேத்யூ சாமுவேல் உட்பட மூவரை பிடிக்க தனிப்படை டெல்லிக்கும், வழக்கில் தொடர்புடைய மனோஜ், சயான் ஆகியோர் கேரளாவில் பதுங்கியுள்ளதாக வெளியான தகவலையடுத்து, மற்றொரு குழு கேரளாவுக்கும் விரைந்துள்ளன, என இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் பதிவாயிருந்தது. 

இதனிடையே, தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறியிருப்பதாவது :- கோடநாடு மர்ம மரணங்கள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் குற்றம்சாட்டி நான் வீடியோ வெளியிட்டதை அடுத்து, அவர் என் மீது சென்னை போலீசில் அவதூறு பரப்பியதாகப் புகார் அளித்திருக்கிறார். 

மேலும், சென்னை மற்றும் டெல்லியில் உள்ள எனது ஊடக நண்பர்கள் சிலர் என்னைக் கைது செய்வதற்காக தமிழகப் போலீசார், டெல்லி வந்திருப்பதாகத் தெரிவித்தனர். மேலும், என்னுடைய வீட்டை சோதனையிடவும் அவர்கள் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. அதேபோல், சயன் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரையும் போலீஸார் கைது செய்ய இருக்கிறார்கள்.

இந்திய வரலாற்றில் முதல்முறையாக 5 கொலைகளில் தொடர்புடையதாக முதலமைச்சர் மீது புகார் எழுந்துள்ளது. இந்தசூழலில், அந்தக் கொலைகளின் பின்னணியில் இருப்பது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதை நான் திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறேன், இவ்வாறு அந்த பதிவில் இருந்தது. 



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...