நீலகிரி : உதகை வரும் அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வை மின்னணு தகவல் பலகை சேரிங்கிராஸ் சந்திப்பில் அமைக்கப்பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் சாலை விபத்துகளைத் தவிர்க்கவும், சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தியும் போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில், குன்னூர் அருகே காட்டேரி சந்திப்பில் சோலார் மூலம் இயங்கும் ஒளிரும் விளக்குகள் சாலையோரம் பொருத்தப்பட்டதும் ஒன்றாகும்.

இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம், கோத்தகிரி மற்றும் குன்னூர் வழியாக உதகை வரும் அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மின்னணு தகவல் பலகை உதகை சேரிங்கிராஸ் சந்திப்பில் பொருத்தப்பட்டு உள்ளது. இதில், செல்போனில் சிம் கார்டு போடுவது போல், மின்னணு தகவல் பலகையில் சிம் கார்டு பொருத்தப்பட்டு இருக்கும். அதன் இணைப்பு நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியாவின் கைப்பேசியோடு இணைக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, சீட் பெல்ட் அணிய வேண்டும், இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், மிதமான வேகத்தில் செல்ல வேண்டும், உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைக் குறிப்புகள் போலீஸ் சூப்பிரண்டு செல்போனில் இருந்து மின்னணு தகவல் பலகை சிம்கார்டுக்கு அனுப்பப்படும். அந்த சிக்னலை ஏற்றுக்கொண்டு, சாலைப் பாதுகாப்பு தகவல்கள் பலகையில் தெரியும்.
மேலும், உள்ளூர் மற்றும் வெளியூர் வாகன ஓட்டிகள் சேரிங்கிராஸ் போக்குவரத்து சிக்னலில், வாகனங்களை நிறுத்தி சில நொடிகள் நிற்பார்கள். அவர்கள் சிக்னலை கவனிக்கும் போது, அந்த மின்னணு தகவல் பலகையில் போக்குவரத்து விதிமுறைகளைத் தெரிந்துகொள்ளும் வகையிலும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் தகவல் வருமாறு அமைக்கப்பட்டுள்ளது.