கோவையில் ஆயுள் தண்டனை கைதி சந்தேக மரணம் : கொலை வழக்காக மாற்றியது போலீஸ்

கோவை : கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்ட கோவை மத்திய சிறை ஆயுள் தண்டனை கைதியின் இறப்பு வழக்கு, கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை : கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்ட கோவை மத்திய சிறை ஆயுள் தண்டனை கைதியின் இறப்பு வழக்கு, கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. 

திருப்பூர் மாவட்டம், கேத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (56). இவர் தனது மகனைக் கொன்ற வழக்கில், 2018 -ல் ஆயுள் தண்டனைக் கைதியாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர் கடந்த புதன்கிழமை உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். 

இதையடுத்து, இவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இவரது உடலை மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை செய்தனர். 

இந்நிலையில், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்ட ராமசாமியின் வலது காது பகுதிக்கு கீழே ரத்தம் வழிந்து காணப்பட்டதாகவும், தலையில் காயம் இருந்ததால் அவர் அடித்துக் கொல்லப்பட்டு இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுப்பப்பட்டது. ஆகையால், கைதி ராமசாமி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, ஜே.எம்.3 மாஜிஸ்திரேட் வேலுசாமி கோவை மத்திய சிறையில் விசாரணை நடத்தினார். 

இதனிடையே, அதேபோலவே ஆய்வாளர் தெய்வசிகாமணி தலைமையிலான ரேஸ்கோர்ஸ் போலீசார், கோவை மத்திய சிறையில் விசாரணை நடத்தினர். இதில், கைதியுடன் தங்கியிருந்த இரண்டு கைதிகளிடமும், எதற்காக சண்டையிட்டனர் என பலகட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில், உடன் தங்கியிருந்த கைதி ரமேஷ் என்பவர், ராமசாமியை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ராமசாமி இறப்பு தொடர்பான வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...