கோவையில் புதிதாக பொருத்தப்பட்ட 50 கண்காணிப்பு கேமராக்களுக்கான கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா

கோவை : கோவை, ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக 50 கேமராக்கள் அமைக்கப்பட்டதற்கான, கட்டுப்பாட்டு அறையைக் கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் இன்று திறந்து வைத்தார்.

கோவை : கோவை, ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக 50 கேமராக்கள் அமைக்கப்பட்டதற்கான, கட்டுப்பாட்டு அறையைக் கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் இன்று திறந்து வைத்தார். 

கோவை மாவட்டத்தில் நடைபெறும் கொலை, கொள்ளை, போக்குவரத்து விதிமீறல்கள் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் அரங்கேறுகின்றன. காவல் துறையினர் சார்பில் இதனைத் தடுக்கவும், குற்றவாளிகளை அடையாளப்படுத்திப் பிடிக்கவும் புதியதாகக் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் ஆர்.எஸ் புரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பொது மக்கள் ஆதரவுடன் காவல்துறையினர் பல பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தியுள்ளனர். 



இந்த நடவடிக்கையினால் இப்பகுதியில் குற்ற எண்ணிக்கை குறைந்துள்ளது. அதேபோல, ஆர்.எஸ் புரம் காவல் எல்லையில் 4 தெருக்கள் கூடும் இடத்தில் எட்டு திசையும் தெரியும் அளவிற்கு நவீன கேமராக்களைப் பொருத்தியுள்ளனர். இந்நிலையில், இன்று ஆர்.எஸ் புரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜோதி அவர்களின் முயற்சியில், காவல்துறை சார்பில் கூடுதலாக, 50 கேமராக்களை பொருத்தியுள்ளனர். 

இதையடுத்து, பொருத்தப்பட்ட கேமராக்கள் மூலம் கண்காணிக்க, ஆர்.எஸ் புரத்தில் இருக்கும் மாநகராட்சி சித்த மருத்துவமனை வளாகத்தில் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளனர். இதனை இன்று கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் ஐபிஎஸ் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றித் தொடக்கி வைத்தார். அதேபோலவே, மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையாளர் டாக்டர்.எல். பாலாஜி சரவணன் இந்த நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். 



இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் அவர்கள் கூறுகையில், "ஆர்.எஸ் புரம் காவல் நிலைய எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ளது போல அனைத்துக் காவல் நிலைய எல்லைகளிலும் பொது மக்கள் ஆதரவுடன் காவல்துறையினர் கேமராக்களை அமைக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றங்கள் குறைவது மட்டுமன்றி குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டுபிடித்து பிடிக்கவும் முடிகிறது. இதற்கு ஆர் எஸ் புரம் காவல் நிலையம் ஒரு முன்மாதிரியாக உள்ளது," என்றார். 

மேலும், இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர்கள் சுஜித் குமார், பெருமாள், செல்வகுமார், ஈஸ்வரன், உதவி ஆணையாளர் வெங்கடேசன், ஆய்வாளர்கள் ஜோதி மற்றும் தேவேந்திரன் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...