நீலகிரி : உதகை சுற்றுவட்டார பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகரித்ததால் தோட்ட தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை உறைபனி தாக்கம் அதிகளவில் காணப்படும். டிசம்பரில் உறைபனி பொழிவு அதிகம் இருக்கும். இச்சமயத்தில், கடும் குளிர் நிலவி வெப்பநிலை 4 டிகிரிக்கும் குறைவாகி தேயிலை செடிகள், புல்வெளிகள், செடி, கொடிகள் கருகும் நிலையை அடையும்.

இந்நிலையில், இந்தாண்டு நீர் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. இதனால், உறைபனி தாக்கம் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டு கடந்த 1 -ம் தேதி முதல் உறைபனி தொடங்கி பனியின் தாக்கம் சற்று அதிகமாகக் காணப்பட்டது. இதையடுத்து, உதகை ,குன்னூர், கேத்தி பள்ளத்தாக்கு, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் கடும் உறைபனி நிலவுகிறது. மேலும், பனியின் தாக்கத்தால் தேயிலை தோட்டங்கள், விளை நிலங்கள், புல்வெளிகள் போன்றவை வெள்ளைக் கம்பளம் விரித்தது போல் காணப்பட்டது.
மேலும், அதிகாலை நேரத்தில் மலை காய்கறி பயிரான கேரட் அறுவடையில் பல கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தாண்டு வழக்கத்துக்கு அதிகமாக நிலவும் கடும் குளிரால் தொழிலாளர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். உதகையில் பகல் நேரங்களில் அதிகபட்சமாக 19 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 6 டிகிரி செல்சியசும் வெப்பநிலை காணப்படுகிறது.