கோவை : பீளமேடு, ஒண்டிபுதூர் போன்ற பகுதிகளில் கடை மற்றும் வீடுகளில் கொள்ளையடித்து வந்த இரண்டு கொள்ளையர்களை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவை பீளமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தொடர்ந்து பூட்டிய வீடுகளில் மற்றும் கடைகளில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று கொண்டிருந்தது. இதையடுத்து, பீளமேடு குற்றப்பிரிவு ஆய்வாளர் அன்பரசு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அதேபோல, கோவை, ஈரோடு, சேலம் போன்ற பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் பழைய குற்றவாளிகள் குறித்து விவரங்களை சேகரித்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில், போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கோவை ஆடிஸ் வீதியில் சந்தேகத்திற்கிடமான இரண்டு நபர்களைப் பிடித்தனர். இதில், கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கவேலுவின் மகன் குமார் (எ) ராம்குமார் (34), சென்னையைச் சேர்ந்த தாமோதரனின் மகன் சதீஷ்குமார் (32), ஆகியோரிடம் போலீசார் விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் இவர்கள் ஒண்டிபுதூர் பாலத்திற்கு கீழே உள்ள கடைகளில் கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டனர்.
அதேபோலவே, பீளமேடு பகுதியில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து நகை, ஏ.டி.எம் கார்டு போன்றவற்றைத் திருடியதை ஒப்புக்கொண்டனர். மேலும், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து 9 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மொத்தமாகப் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தநிலையில், குற்றவாளிகள் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.