கோவை : கோவை, பாலக்காடு சாலையில் உள்ள காக்காசாவடி அருகே 350 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக 7 பேரைத் தனிப்படை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரள மாநிலம் திருச்சூர் கல்யாண் ஜூவல்லர்ஸ் கிளையில் இருந்து, கோவையில் உள்ள கல்யாண் ஜூவல்லர்ஸ் கிளைக்கு 350 பவுன் தங்க நகை, 243.320 கிராம் வெள்ளி நகை கடந்த 7 -ம் தேதி எடுத்து வரப்பட்டது. திருச்சூர் கிளையின் ஊழியர்கள் திருச்சூரை சேர்ந்த அர்ஜூன் (22), வில்பர்ட்(31,) ஆகியோர் நகையை எடுத்து வந்தனர். இந்நிலையில், காக்காசாவடி அருகே உள்ள நவக்கரை அருகே கார் வந்த போது, மர்மநபர்கள் அர்ஜூன் மற்றும் வில்பர்ட்டை தாக்கியுள்ளனர்.

இதையடுத்து, மர்மநபர்கள் காருடன் 350 பவுன் நகை, 243.320 கிராம் நகையை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த நகையின் மதிப்பு ரூ.98 லட்சம் ஆகும். இதுகுறித்து க.க. சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து கொள்ளையர்களைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இதனிடையே, தற்போது, இவ்வழக்கில் தொடர்புடையதாக 7 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருவதாக தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இக்கொள்ளைச் சம்பவத்தில் 12 பேருக்கு தொடர்பிருப்பதாகவும், அனைவரையும் பிடித்து விசாரித்தால் மட்டுமே கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் எங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதும் தெரியவரும், என போலீசார் தெரிவித்தனர்.