திருப்பூரில் பெண்ணிடம் கைப்பையை திருட முயன்ற இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

திருப்பூர் : திருப்பூரில் பணி முடிந்து தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் கைப்பையை திருடிவிட்டு ஓட முயன்ற இளைஞருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

திருப்பூர் : திருப்பூரில் பணி முடிந்து தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் கைப்பையை திருடிவிட்டு ஓட முயன்ற இளைஞருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதி நொய்யல் பாலத்தில் பணி முடிந்து தனியாக நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் கைப்பையை பிடுங்கிவிட்டு ஓட முயன்ற இளைஞரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர். இதையடுத்து, அவரிடமிருந்த பெண்ணின் பையினை மீட்டு கொடுத்தனர். இந்நிலையில், அப்பகுதியில் தொடர்ந்து பல திருட்டு சம்பவங்கள் நிகழ்வதால், இந்த திருட்டில் ஈடுபட்ட இளைஞர் மீது பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்தது. 

இதையடுத்து, சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக அவரை பொதுமக்கள் கடுமையாகத் தாக்கினர். இதனிடையே, அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, விரைந்து வந்த தெற்கு போலீசார் பொதுமக்களிடமிருந்து இளைஞரை மீட்டு விசாரித்தனர். 



இதில், அவர் பெயர் சதீஷ் என்பதும், ராஜபாளையத்தை சேர்ந்த இவர் திருப்பூரில் தங்கி போர்வெல் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மது போதையில் இருந்த இவரிடமிருந்து யாரோ பணத்தை திருடி விட்டதால், வேறு வழியின்றி திருடியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவித்தார். ஆனாலும், சதீஷ் மீது வேறு குற்ற வழக்குகள் உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...