கோவை : தமிழ்நாடு வன அகாடமி, சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுவை சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் கொண்ட குழு இந்தியாவில் இருக்கும் அழிந்து வரும் 100 பறவைகள் குறித்து ஆராய்ந்து, அதனை ஆவணவப்படுத்தவுள்ளனர். இதில், அந்த பறவைகள் என்னென்ன பிரச்சனைகளையும், சவால்களையும் சமாளிக்கின்றன என்பது குறித்து ஆராயவுள்ளனர்.
கோவை : தமிழ்நாடு வன அகாடமி, சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுவை சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் கொண்ட குழு இந்தியாவில் இருக்கும் அழிந்து வரும் 100 பறவைகள் குறித்து ஆராய்ந்து, அதனை ஆவணவப்படுத்தவுள்ளனர். இதில், அந்த பறவைகள் என்னென்ன பிரச்சனைகளையும், சவால்களையும் சமாளிக்கின்றன என்பது குறித்து ஆராயவுள்ளனர்.
கோவையில் இருந்து இன்று புறப்பட்ட அந்தக் குழுவின் பயணம் சுமாராக 22 ஆயிரம் கி.மீ வரையிலும் சாலை வழியாக மேற்கொள்ளப்படுகிறது. இந்தத் தேடல் பயணத்திற்கு 'சீக் -2019' என்று தலைப்பிட்டுள்ளனர். மூன்றாவது வருடமாக நிகழும் இந்த சீக் சீரிஸ் பயணத்தினை தலைமை வனப்பாதுகாவலர் யோகேஷ் திவேதி காலை 11 மணியளவில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த குழுவில் ஈ.சி.ஜி.,யின் தலைவர் ஆர்.முகமது சலீம், பறவையியல் மற்றும் தில்லை மகாதன். இயற்கை வரலாற்று மையத்தின் முன்னாள் இயக்குனர் பி.ஏ அஜீஸ், மருத்துவர் மற்றும் வனவிலங்கு ஆர்வலர் ரவி ரிஷி, வனவியல் புகைப்பட கலைஞர் தில்லை மகந்தன் மற்றும் இந்த நீண்ட பயணத்தை பதிவு செய்ய வனவிலங்கு புகைப்படக்காரர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அழிந்து வரும் நிலையில், வாழத் துடிக்கும் 100 பறவையினங்களை ஆய்வு செய்ய மேற்கொள்ளும் இந்த 90 நாள் பயணம் மார்ச் மாதம் வரை நிகழும்.
"நாங்கள் பறவைகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராயவுள்ளோம். மேலும், ஆந்த்ரோபோஜெனிக் தொடர்பான காரணிகள், வேறு எதுவாக இருந்தாலும் அதனை கண்டறியவுள்ளோம்," என்றார் சலீம்.
இது குறித்து ரவி ரிஷி கூறுகையில், " இது போன்ற பயணங்கள் மேற்கொண்டால் தான் பறவைகளின் பிரச்சனைகளை கண்டறிந்து அதற்கான தீர்வை அடைய முடியும். இதில், மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கும் சென்று ஆராய உள்ளோம்," என்கிறார்.
"இந்த பயணத்தின் மூலம் பறவைகளுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் காரணிகளை குறித்து ஆழமாக அறிய முடியும். அதனைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்வோம். மேலும், பல தரப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களுக்கு விழிப்புணர்வு அளிப்பதுடன், நாங்களும் நிறையக் கற்கவிருக்கிறோம்,"என்றார் தில்லை மகாதன் .
இந்த பயணத்தின் மூலம், பல்வேறு கிராமங்கள், ஆய்வாளர்கள், பறவியலாளர்கள், மாணவர்கள் குறிப்பாக வித விதமான பறவைகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். இதனால், பல கிடைக்கும் தகவல்களைக் கொண்டு பறவையினங்களை பாதுகாப்பதே இதன் நோக்கமாகும். இது நிச்சயம் பறவைகளின் பாதுகாப்பிற்கு ஒரு சிறந்த வடிகாலாக அமையும்.