நீலகிரி : நீலகிரி மாவட்ட பகுதிகளில் அறுவடை செய்யும் முன், காபி செடிகளில் பூத்த காபி பூக்கள் கருக தொடங்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், கோத்தகிரியில் உள்ள சில பழங்குடியினர் கிராமங்களில் தேயிலைக்கு அடுத்தபடியாக பழங்குடியினர் காபி பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், காபி செடிகளில் பூக்கள் பூத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால், பருவநிலை மாற்றத்தால் பொழியும் பனியினால் செடிகளில் பூத்திருந்த காபி பூக்கள் கருகத் தொடங்கியுள்ளன. இதனால், மே மாத சீசனுக்கு காபிகளை விற்க முடியுமா ? என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால், பழங்குடியின விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதால், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.