கோவையில் இளைஞரை கடத்தி கொலை செய்த நண்பர்கள் : இருவர் கைது

கோவை : கவுண்டம்பாளையத்தில் காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்த இளைஞரை, கடத்திக் கொன்ற நண்பர்கள் இருவரைக் கைது செய்த போலீசார் தலைமறைவான மூன்று பேரை தேடி வருகின்றனர்.


கோவை : கவுண்டம்பாளையத்தில் காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்த இளைஞரை, கடத்திக் கொன்ற நண்பர்கள் இருவரைக் கைது செய்த போலீசார் தலைமறைவான மூன்று பேரை தேடி வருகின்றனர். 

கோவை, கவுண்டம்பாளையத்தில் உள்ள பூக்கடையில் வேலை செய்து வந்தவர் ராஜா (25). இவர் கடந்த 3 -ம் தேதி வேலைக்கு சென்றபின் வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த உறவினர்கள் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதில் துடியலூர் போலீசார், ஆளைக் காணவில்லை என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

 

விசாரணையின் ஒரு பகுதியாக கைப்பேசி உரையாடல்களை எடுத்துக் கொண்டனர். இதன் மூலம் ராஜா கடத்தப்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ராஜாவின் நண்பர்களான காளி மற்றும் தர்மன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், ராஜாவை மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்று குத்திக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். 

இதையடுத்து, கொலையில் தொடர்புடைய விஜயகுமார், சபரி, நல்லேந்திரன் ஆகியோரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, விஜயகுமார் மற்றும் நல்லேந்திரன் மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளது. இந்நிலையில் இன்று மாலை 5.50 மணியளவில் 3 ஜீப்புகளில் ஆய்வாளர் தலைமையில், இயங்கும் தடயவியல் போலீசாருடன் கணுவாய் தடுப்பணை பள்ளத்திற்கு போலீசார் வந்தனர். 

அதன் பின்பு பிரேதத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்நிலையில், இறந்த பிரேதமானது அழுகிபோய் எழும்பு கூடாக இருந்தது. துடியலூர் போலீசார் இந்த கொலை வழக்கு தொடர்பாக, சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் தலைமறைவாக இருக்கும் மற்ற குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வருகின்றனர். நேற்றிரவே பிரேதம் இருக்கும் இடம் தெரிந்தும், இன்று மாலை வரை போலீசார் உடலை மீட்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...