பொள்ளாச்சியில் 5 -வது சர்வதேச பலூன் திருவிழா நாளை தொடக்கம்

கோவை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 5 -வது சர்வதேச பலூன் திருவிழா வித்தியாசமான ராட்ச பலூன்களுடன் நாளை கோலாகலமாக தொடங்குகிறது.


கோவை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 5 -வது சர்வதேச பலூன் திருவிழா வித்தியாசமான ராட்ச பலூன்களுடன் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. 



சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக, சர்வதேச பலூன் திருவிழா வருடாந்திரம்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக சுற்றுலாத்துறையின் வழிகாட்டுதலின் படி, 5 -வது சர்வதேச பலூன் திருவிழா கோவை, பொள்ளாட்சியில் நாளை தொடங்கவிருக்கிறது. குளொபல் மீடியா மற்றும் தி ஸ்லேவ்ஸ் உணவகம் இணைந்து நடத்தும் இந்த ஏர் பலூன் திருவிழா 15 -ம் தேதி நிறைவடைகிறது. 



இந்த விழாவின் சிறப்பே அமெரிக்கா, நெதர்லாந்து போலந்து உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் ராட்சத பலூன்களே ஆகும். இந்த ஆண்டு பார்வையாளரை வெகுவாக கவர ஜெர்மனியிலிருந்து ஒயிட் கேட் பலூன், பெல்ஜியத்திலிருந்து ஐஸ் கீரிம் பலூன், அமெரிக்காவிலிருந்து ஆங்கிரி பேர்ட்ஸ் பலூன் போன்ற சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஏர் பலூன்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. 



இதையடுத்து, தொடக்க நாளான 13 -ம் தேதி சிறப்பு ஏற்பாடாக நடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியா ஜெர்மியாவின் இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது. இதே திருவிழா, சென்னை செங்கல்பட்டில் உள்ள மகேந்திரா வேர்ல்ட் சிட்டியில் மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...