கோவையில் ஏ.டி.எம் மையம் மற்றும் வங்கி சேவைகளை மேம்படுத்தக் கோரி சிட்டிசன்ஸ் வாய்ஸ் அமைப்பு மனு

கோவை : ஒரே இடத்தில் மூன்றுக்கு மேற்பட்ட பணம் செலுத்தும் எந்திரங்கள் மற்றும் ஏ.டி.எம் மையங்களை அமைக்கக்கோரி ரிசர்வ் வங்கிக்கு சிட்டிசன்ஸ் வாய்ஸ் அமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை : ஒரே இடத்தில் மூன்றுக்கு மேற்பட்ட பணம் செலுத்தும் எந்திரங்கள் மற்றும் ஏ.டி.எம் மையங்களை அமைக்கக்கோரி ரிசர்வ் வங்கிக்கு சிட்டிசன்ஸ் வாய்ஸ் அமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் அமைப்பு தலைவர் சி.எம்.ஜெயராமன் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது ;- பெரும்பாலான ஏ.டி.எம் எந்திரங்களில் பாதுகாப்பு ஊழியர் அல்லது கண்காணிக்கும் கேமரா ஆகியவை முறையாக இருப்பதில்லை. பல நேரங்களில் ஏ.சி வேலை செய்வதில்லை. நாய் போன்ற கால்நடைகள் உள்ளே பதுங்கி இருக்கின்றன. ஏ.டி.எம் எந்திரங்களுக்கான பராமரிப்பு பணிகள் சரிவர செய்யப்படுவதில்லை. 

சில சமயங்களில் கேஷ் டெபாசிட் செய்யும் எந்திரத்தில் பணம் செலுத்தி விட்டு சென்றால், நோட்டு கிழிந்துள்ளது அல்லது கள்ளநோட்டு இருக்கின்றது என தொலைபேசி மூலம் அழைத்து அந்த நோட்டை மாற்றி கொடுக்க வலியுறுத்துவதாகவும் நிறையப் புகார்கள் வருகின்றன. 

மேலும், ஆன்லைனில் அல்லது எஸ்.எம்.எஸ் மூலமாக வங்கிப் பரிவர்த்தனைகளை செய்து கொள்ளும் போது, ஏதாவது தொலைபேசி மூலமாகப் போலியான அழைப்புகள் மூலமாக, சட்டத்திற்கு புறம்பாக வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண்களை பெற்று பணத்தை எடுக்க சில திருடர்கள் முயல்கிறார்கள். இவற்றிலிருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு வங்கியினுடைய கடமையாகும். 

இதனிடையே, கண்காணிக்க வேண்டியது ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் முக்கிய பொறுப்பு. இது விஷயமாக வங்கி மேலாளர்கள் போதுமான அறிவிப்பும் வாடிக்கையாளர்களுக்கு தெரியும் வகையில் வங்கியில் மட்டுமல்ல, ஏ.டி.எம், பொதுமக்கள் பார்வைக்கு அறிவிப்பு வைக்க வேண்டும். செய்தித்தாள் வானொலி தொலைக்காட்சி மூலமாக அவ்வப்போது வலியுறுத்த வேண்டும். 

இது எல்லாவற்றுக்கும் மேலாக ஏதாவது ஒரு போலி அழைப்பு வந்ததாக ஒரு புகார் வந்தால், உடனடி வாடிக்கையாளர்களுடன் ஒரு கடிதம் பெற்று சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகளிடம் உள்ள (சைபர் கிரைம்) நேரடியாகத் தொடர்பு கொண்டு வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க வேண்டும். 

இதனிடையே, ஒரு முக்கியமான ஒரு வேண்டுகோள், நிறைய இடங்களில் ஏ.டி.எம் மிஷின்களை குறைத்துக் கொள்வதாக வங்கி அறிவித்து இருக்கின்றது. இது மேலும் வாடிக்கையாளர்களை ஒரு சிக்கலான சூழ்நிலைக்கு தள்ளுகிறது. தேவையென்றால், ஒரே இடத்தில் பல - மூன்று அல்லது நான்கு வங்கியினுடைய பணம் செலுத்தும் எந்திரம், ஏ.டி.எம் எந்திர மையங்களை நிறுவி குறைந்தபட்சம் 2 வாட்ச்மேனை அங்கே பணியமர்த்தினால் நிர்வாகச் செலவு குறையும். 

இதனால், ஒரு வாட்ச்மேனுக்கு மற்றொருவர் கண்காணிப்பாக இருந்து கொள்வார். 24 மணி நேரத்திலும் சுழற்சி முறையில் அவர்கள் அங்கேயே பணிபுரிவதற்கு உதவியாக இருக்கும். இந்த கருத்துக்களை ஆலோசித்து வங்கியினுடைய நிர்வாகம் முன்னணி வங்கி மூலமாகவும் ரிசர்வ் வங்கி மூலமாகவும் சம்பந்தப்பட்ட காவல்துறை சைபர்கிரைம் துணை கொண்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்ய வேண்டும். 

இதையடுத்து, சரியாக வேலை செய்யும் கேமராவை பொருத்திச் செயல்படுகின்றனவா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வாடிக்கையாளருக்கு நம்பிக்கை ஊட்ட ஒரு கூட்டு முயற்சியில் காவல்துறை அதிகாரியுடன் இணைந்து செயல்பட வேண்டும். 

மேலும், இறுதியாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வங்கிகளுக்கு. இதுபோல வாடிக்கையாளர்களின் ரகசிய விவரங்களைக் கொடுக்கப்படுகிறதா அல்லது திருடப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க உத்தரவிட வேண்டும். தேவையானால், மூன்று மாதத்திற்கு ஒரு முறை வாடிக்கையாளர்கள், காவல் துறையினர் மற்றும் வங்கி நிர்வாகம் கூட்டம் கூட்டி தகுந்த வழி முறைகளை உண்டாக்கி நிரந்தர தீர்வு காண வேண்டும். இந்திய வங்கிகள் அனைத்தும் பொதுமக்களுக்காகவும் அவர்களது பணம் பொருள் ஆகியவற்றிற்கு உத்திரவாதம் தரவேண்டும். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...