கோவை : மேட்டுப்பாளையம் அருகே தனியார் கல்லூரி மாணவர்கள், தமிழர்களின் பாரம்பரியம் மாறாமல் கிராமிய நடனமாடி, மண்பானையில் சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
கோவை : மேட்டுப்பாளையம் அருகே தனியார் கல்லூரி மாணவர்கள், தமிழர்களின் பாரம்பரியம் மாறாமல் கிராமிய நடனமாடி, மண்பானையில் சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையில் உள்ள ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில், நடைபெற்ற மாணவ மாணவிகள் சமத்துவ பொங்கலை, கல்லூரி முதல்வர் சுகுணா முன்னிலையில் கல்லூரி அறங்காவலர் வெ.ராமகிருஷ்ணன் தலைமையேற்று துவக்கி வைத்தார். விழாவில், தமிழர்களின் பாரம்பரிய ஆடைகளான பெண்கள் சேலை கட்டியும், ஆண்கள் வேட்டி, சட்டை என புத்தாடைகளைஅணிந்தும், கரும்புகளை கட்டியும் புதுப்பாணையில் பச்சரி இட்டு பொங்கல் வைத்து பொங்கல் விழாவினை கொண்டாடினர்.

இதனையடுத்து, பொங்கலை சூரியனுக்கு படைத்தும், கால்நடைகளுக்கு கொடுத்தும் வழிபாடு செய்தனர். தமிழரின் பாரம்பரியம் மாறாமல் உரிஅடித்தல், கிராமிய நடனமாடியும் மகிழ்ந்தனர். இளைஞர்கள் கபாடி போன்ற பாரம்பரிய விளையாட்டுக்களில் பங்கேற்று உற்சாகமாக சமத்துவ பொங்கலை கொண்டாடினர். இந்த விழாவில், பொங்கல் கோலமிட்டும், கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.