மேகதாது அணை கட்டுமானப் பணியைத் தொடங்க வலியுறுத்தி கன்னட சலுவாளி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மேகதாது அணை கட்டுமானப் பணியைத் தொடங்க வலியுறுத்தி தமிழக - கர்நாடக எல்லையில் கன்னட சலுவாளி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேகதாது அணை கட்டுமானப் பணியைத் தொடங்க வலியுறுத்தி தமிழக - கர்நாடக எல்லையில் கன்னட சலுவாளி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

காவிரியின் குறுக்கே தமிழக எல்லையில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில், 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 6 ஆயிரம் கோடி செலவில், மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்தது. இந்த அணையின் மூலம், 67 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகாவால் தேக்கி வைக்க முடியும். பெங்களூரு நகரத்தின் குடிநீர் வசதிக்காகவே இது கட்டப்பட முடிவு செய்ததாக கூறப்பட்டது.

இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இதற்கான வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு, அம்மாநில அமைச்சரவையில் ஒப்புதலும் பெறப்பட்டது. இதனையடுத்து, மேகதாது அணை தொடர்பாக செயல் திட்ட வரைவு அறிக்கையை மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய நீர்வள ஆணையம் விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கர்நாடக நீர்ப்பாசனைத்துறைக்கு உத்தரவிட்டது. இதற்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி, அதுதொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மான நகல் பிரதமருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு அளித்த அனுமதியை திரும்பப் பெறக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், இம்மனு மீது முடிவெடுக்கும் வரை, அணை கட்டும் பணிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி இருந்தது.

இந்த நிலையில், மேகதாது அணை கட்டுவதற்கான பணியைத் தொடங்க வலியுறுத்தி, கிருஷ்ணகிரி அருகே உள்ள அத்திப்பள்ளி பகுதியில் வட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட சலுவாளி கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

அவருடன் கன்னட அமைப்பினரும் சிலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது, போலீசார் அவரை குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர். 

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய வட்டாள் நாகராஜ், "தமிழக மக்கள் மேகதாதுவில் அணை கட்ட ஒப்புக்கொள்ளவில்லை எனில், இனி தமிழ் திரைப்படங்களை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம். மேகதாதுவில் கண்டிப்பாக அணை கட்டப்படும்' என கூறினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...