விநியோகஸ்தர்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 6 சதவீதமாக குறைப்பு : வரும் ஏப்.,1 முதல் அமல்

ரூ. 50 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் விநியோகஸ்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது.

ரூ. 50 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் விநியோகஸ்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது. 

சேவைத் துறைகளுக்கான வரி சீரமைப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வெளியிட்டுள்ள அறிவிப்பில் இதனை தெரிவித்துள்ளார். மேலும், இந்த வரி குறைப்பு நடவடிக்கை தயாரிப்பு மற்றும் உற்பத்தியாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என அவர் கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- நிதியாண்டு கணக்கீட்டின்படி, 50 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் விநியோகஸ்தர்களுக்கு மத்திய, மாநில ஜி.எஸ்.டி. 6 சதவீதமாக நிர்ணயிக்கப்படுகிறது. இந்த வரிக்குறைப்பு நடவடிக்கையானது, சரக்கு மற்றும் சேவை துறையில் இருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் பொருந்தும். தற்போது, சரக்கு வரியில் விதிவிலக்கு பெற்றுள்ளவர்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது.

குறிப்பாக, பெரும்பாலும் விநியோகஸ்தர்கள் கடன்பெறாமல் தங்களது பணியினை செய்து வருவதால், அவர்களுக்கு இந்த வரிக் குறைப்பு உகந்ததாகும். காலாண்டுக்கு ஒருமுறை வரியினை செலுத்த வேண்டும். ஆனால், ஆண்டிறுதியில் வரி விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும். 

வரிவிலக்கு உச்சவரம்பு 40 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது குறித்து வரி வல்லுநர்கள் கூறுகையில், "நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்சவரம்பு, சரக்கு விநியோகஸ்தகர்களுக்கு மட்டுமே ஏற்புடையதாக உள்ளது. சேவைத் துறையினருக்கு ஏற்புடையதல்ல." என்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...