கோவை : கோவை மாநகர் உருவாக்கிய பெருமையைக் கொண்ட தலைசிறந்த முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை கோவை டை அமைப்பு சிறப்பித்துள்ளது.

11-வது கோவை விழாவின் ஒரு பகுதியாக 'கோவை டை' அமைப்பின் சார்பில் கோவை மாநகரை தொழில்நகரமாக உருவாக்கிய பிரபல நிறுவனங்களின் தலைவர்களை பெருமைப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், எல்.ஜி. வரதராஜ், டாக்டர் என். மகாலிங்கம், எஸ்.ஆர்.பி. பொன்னுசாமி, எஸ்.பி. நரசிம்ஹாலு நாயுடு, சர் ரோபர்ட் ஸ்டேன்ஸ், ஸ்வாமிக்கண்ணு வின்சென்ட், ஆர்.கே. சமூக செட்டியார், பி.ஏ. ராஜு செட்டியார், ஸ்ரீராமலு நாயுடு, பி.எஸ்.ஜி. சகோதரர்கள், ஜி.கே. தேவராஜலூ, ஜி.டி. நாயுடு, ஆ.கே. வெங்கடசாமி நாயுடு, கே. தாமோதரசாமி நாயுடு, என்.கே. மகாதேவ ஐயர், ஏ.பி. திருவெங்கடசாமி முதலியார், டிபி.பி. சோமசுநதர் செட்டியார், டெக்ஸ்டுல் பாலசுந்தரம், பி.பி. கிருஷ்ணமூர்த்தி, டி.பி.எஃப். நாராயணசாமி நாயுடு ஆகியோர் பெருமைப்படுத்தப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, கோவை டை அமைப்பின் தலைவர் ஹேமதா அண்ணாமலை பேசுகையில், "கோவையின் ஆத்மாவாக தொழில்முனைவோர்கள் திகழ்கின்றனர். சொந்த இடம் வைத்துள்ளவர்களுக்கு இந்த மாநகர் சிறப்பான வாழ்க்கையை கொடுக்கிறது. இந்த மாநகரானது, பல்வேறு தொழிலதிபர்களை உருவாக்கியதுடன், தற்போதும் வளர்ந்து வரும் தொழில்முனைவோர்களை அதிகளவில் உருவாக்கி வருகிறது," என்றார்.

சிறுதுளி அமைப்பின் தலைவர் வனிதா மோகன் கூறுகையில், "கோவை மாநகரின் மரபணுக்களாக தொழில்முனைவோர்கள் இருக்கின்றனர். தொழிற்சாலை துறையினர் ஒருங்கிணைந்து செயல்படுவதால், மாநகர் மேம்படுகிறது," என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ராஜேஷ் கோவிந்தராஜலு, கோவை மாநகரை தொழில்நகரமாக உருவாக்கிய பிரபல நிறுவனங்களின் தலைவர்களை நினைவுபடுத்தி பேசினார்.