கோவை : மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நேரடி வங்கிக் கடன் வழங்கிட ரூ. 522 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தொகையினை விடுவித்திடவும், சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தனிநபர் மற்றும் குழு கடன், சாலையோர வியாபாரிகளுக்கு சிறு தொழில் கடன், மற்றும் குழு கடன், சாலையோர வியாபாரிகளுக்கு சிறு தொழில் கடன், நகைப்பட்டறை தொழிலாளர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் தனிநபர் கடன் வழங்கிட வங்கி அதிகாரிகளுடன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்க திட்டங்களின் இலக்கினை எய்தி வங்கியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பின்னர், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது :- தமிழகத்தில் மாநில அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 2018-19 ஆண்டில் வங்கிக்கடன் வழங்கிட ரூ.15,000 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், டிசம்பர் 2018 வரை ரூ. 8,000 கோடி எய்தப்பட்டுள்ளது. இது இந்திய வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும். வரும் பிப்ரவரி 2019-க்குள் ரூ.15,000 கோடி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படவுள்ளது இதுவரை இல்லாத வரலாற்றுச் சாதனை ஆகும்.
கோவை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் 2016-17 ம் ஆண்டில் ரூ.180.00 கோடியும், 2017-18ம் ஆண்டில் ரூ.260.00 கோடியும், 2018-19 ம் ஆண்டில் ரூ. 214 கோடி வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் வழங்கிட ரூ. 522.00 கோடி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை ரூ. 214.00 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ. 308.00 கோடியினை மார்ச் 2019க்குள் வழங்கிட வங்கியாளர்களை கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் சுய வேலைவாய்ப்புத் திட்டம் தனிநபர் கடன் மற்றும் குழு கடன் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு முறையாக கடன் தொகையினை திரும்பச் செலுத்துவோருக்கு 4 சதவீத வட்டியில் கடன் வழங்கப்பட்டு வருகிறது, இவ்வாறு அவர் கூறினார்.