கொடநாடு எஸ்டேட் கொலை சம்பவங்களில் தமிழக முதலமைசருக்கு தொடர்பு?: ஆவணப்படம் வெளியிட்ட பத்திரிகையாளர்

கோவை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொட நாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை மற்றும் அதனைத் தொடர்ந்த மர்ம மரணங்களின் பின்னணியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆவணபடம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோவை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொட நாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை மற்றும் அதனைத் தொடர்ந்த மர்ம மரணங்களின் பின்னணியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆவணபடம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அவருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில், காவலாளிகளை கட்டிப்போட்டு, கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். அதில் காவலாளி பகதூர் பலியானார்.

இந்த கொள்ளையில் ஈடுபட்ட ஷயான் என்பவரின் மனைவி, குழந்தை, உட்பட 5 பேர் மர்மமாக உயிரிழந்தனர். இதன்பிறகு ஜெயலலிதாவின் கார் டிரைவர், கனகராஜ் விபத்தில் கொல்லப்பட்டார்.

5 பேர் சாவு என்பது திட்டமிட்ட கொலை என்பதும், கனகராஜ் கொலையும் சந்தேகத்திற்கிடமானது என்றும், கூற்கிறார் மேத்யூஸ்.

மேத்யூஸ் தனது புலனாய்வை ஆவணபடமாக தயாரித்து இன்று டெல்லியில் வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த கொலைகளின் பின்னால் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகவும், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க இந்த கொலை நடந்துள்ளதாகவும் கூறினார்.

ஆவணப்படத்தில், கொள்ளை சமவத்தில் ஈடட்ட ஷயான் பேட்டி அளிதுள்ளார்.

அதில், "ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டபோது, ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜ், என்னை அணுகினார். 

கோடநாடு எஸ்டேட்டில், 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் இருப்பதாகவும், முக்கியமான ஆவணங்கள் இருப்பதாகவும், அவற்றை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழகத்திலிருந்து இதற்காக ஆள் கூட்டி வரக்கூடாது எனவும், கேரளாவில் இருந்து கொள்ளையர்களை அழைத்து வருமாறும், கனகராஜ் என்னிடம் தெரிவித்தார்.

இதையடுத்துதான், நான், கனகராஜ் உட்பட 10 பேர் கொடநாடு எஸ்டேட் உள்ளே நுழைந்தோம். அப்போது 2 காவலாளிகள் அங்கே இருந்தனர். அவர்களை கட்டிப்போட்டுவிட்டு, உள்ளேயிருந்த அறைக்கு சென்றோம். அங்கேயிருந்த ஆவணங்களை எடுத்துக்கொண்டு இரு வாகனங்களில் தப்பியோடினோம். அதில், காவலாளி பகதூர் மூச்சு திணறி இறந்துவிட்டார்.

அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர் ஜெயலலிதாவிற்கு மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்திருந்தனர். அவை கொடநாடு எஸ்டேட்டில் பத்திரமாக பூட்டி வைக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற பல ஆவணங்களைதான் கொள்ளையடித்து சென்றோம். அந்த ஆவணங்களை எடுக்க எங்களுக்கு 5 கோடி பணம் பேரம் பேசப்பட்டது. அதில், ஒரு ரூபாய்கூட எங்களுக்கு வரவில்லை. அதற்குள்ளாக கனகராஜ் கார் விபத்தில் கொல்லப்பட்டார்." என்று பேசியுள்ளார்.

மேத்யூஸ் கூறுகையில், வெறும் கைக்கடிக்காரங்கள்தான் கொடநாடு எஸ்டேட்டில் திருடப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. வெறும் கடிகாரங்களை திருடவா முன்னாள் முதல்வர் இல்லத்தில் கொலை நடந்திருக்கும் என்ற கேள்வி எழுப்பப்படாமல் இருந்தது. இதற்காகத்தான் நான் விடைதேடி ஆய்வுகளை மேற்கொண்டேன். 

இந்த கொலையில் தமிழக முதலமைச்சருக்கு தொடர்பு உள்ளது." என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...