குடியிருப்பை ஒட்டி யானைகள் விரும்பி சாப்பிடும் பயிர்களை வளர்ப்பதை தவிர்க்க வேண்டும் : வனத்துறையினர் அறிவுறுத்தல்

நீலகிரி : கூடலுார் பகுதியில் நுழையும் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த வீட்டை ஒட்டி யானைகள் விரும்பி உண்ணும் பயிர்கள் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

நீலகிரி : கூடலுார் பகுதியில் நுழையும் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த வீட்டை ஒட்டி யானைகள் விரும்பி உண்ணும் பயிர்கள் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 

நீலகிரி மாவட்டம், கூடலுாரில் உணவுக்காக ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள் விவசாய பயிர்களை நாசம் செய்வதுடன், மனிதர்களைத் தாக்கி வருகின்றன. இதனால் வனத்தை ஒட்டிய கிராம மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இதையடுத்து, யானைகள் வருவதைத் தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதன் ஒருபகுதியாக, தற்போது மொபைல் செயலி மூலம் இரவில் யானைகள் நடமாட்டம் குறித்து வனத்துறை சார்பில் கிராம மக்களுக்கு 'அலர்ட்' எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் கொடுத்து உஷார்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தேவாலா வனத்துறை சார்பில், இது தொடர்பான விழிப்புணர்வு முகாம் பாண்டியார் டான்டீ சரகம் எண் 1ஏ தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் நடந்தது. 

இம்முகாமில், வனக் காப்பாளர் ராமதாஸ் தலைமை வகித்து பேசுகையில், ''வனத்துறையின் தொடர் நடவடிக்கையால், யானை - மனித மோதல் குறைந்துள்ளது. இதற்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். குடியிருப்பை ஒட்டி யானைகள் விரும்பி சாப்பிடும் பயிர்கள் பயிரிடுவதை தவிர்க்க வேண்டும். குடியிருப்பு சுற்றி அமைக்கப்பட்டுள்ள அகழியை சேதப்படுத்தக்கூடாது.

மேலும், உணவு பொருட்கள் வகையை சார்ந்த குப்பையை வனப்பகுதியில் வீசுவதைத் தவிர்க்க வேண்டும். யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்பு அருகே முகாமிட்டால், இடையூறு ஏற்படுத்தினால், வனத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். அவைகளை வனக்குழுவினர் விரட்டிக் கண்காணிப்பில் ஈடுபடுவர்,'' என்றார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...