கோவையில் பாரம்பரிய கலைகளுடன் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் தமிழர் திருவிழா

கோவை : பொங்கல் விழாவைச் சிறப்பிக்கும் வகையில் ஜனவரி 15 முதல் 17 -ம் தேதி வரை கொடிசியா மைதானத்தில் பல்வேறு வீர விளையாட்டுகள் நடைபெறவுள்ளது.

கோவை : பொங்கல் விழாவைச் சிறப்பிக்கும் வகையில் ஜனவரி 15 முதல் 17 -ம் தேதி வரை கொடிசியா மைதானத்தில் பல்வேறு வீர விளையாட்டுகள் நடைபெறவுள்ளது. 

ஆதி தமிழர்களின் வீரம் மற்றும் அவர்களின் பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் பல்வேறு விளையாட்டுகளை விட்டு சென்றுள்ளனர். அதனை மீண்டும் நிகழ்த்தும் விதமாக கொடிசியா மைதானத்தில் வைத்து ஜனவரி 15 முதல் 17 -ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. மாலை 4 மணியளவில் தொடங்கும் இவ்விழா 7 மணி வரையிலும் நடைபெறும். 



இந்த மூன்று நாட்களும் 10 -க்கும் மேற்பட்ட வீர விளையாட்டுகள் அரங்கேறவுள்ளன. அதில், சடுகுடு, உறியடித்தல், வழுக்குமரம், இளவட்டக்கல், சிலம்பம், மல்யுத்தம், பம்பரம், கயிறு இழுத்தல், கர்லாசுத்துதல் உள்ளிட்டவை அடங்கும். இவைகள் மட்டும் அல்லாது, கரகாட்டம், ஒயிலாட்டம், பறை, மள்ளர் கம்பம் மற்றும் பலவகையான மெய்சிலிர்க்கும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. 

மேலும், இந்த சிறப்பு விழாவில் கால்நடை கண்காட்சி, 50 -க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகள், கிராமிய உணவு திருவிழா, குழந்தைகள் விளையாட்டு, பெண்கள் விளையாட்டு போட்டிகள், பட்டம் விடுதல், பொருட்காட்சி ஆகியவைகளும் பிரத்யேகமாக நடைபெறவுள்ளன. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...