நீலகிரி : குடிபோதைக்கு அடிமையானவர்களைக் கண்டறிந்து அதிலிருந்து விடுவிக்க, சேவையாற்றும் நீலகிரி தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் முழுவதும், 81 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. தங்கள் பகுதியில் இருந்த மதுக்கடை மூடப்பட்டாலும், பல கி.மீ., துாரம் உள்ள மதுக்கடைகளைத் தேடி சென்று மது வகைகளை குடிப்பதால், தினசரி சராசரி விற்பனை வருமானம், 1.50 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதனிடையே, டாஸ்மாக் மதுக்கடை விற்பனை பகல், 12:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரை என நேரம் நிர்ணயித்தாலும், காலை முதலே அந்தந்த போலீஸ் எல்லைக்கு உட்பட்ட முக்கிய இடங்களில் டாஸ்மாக் சில்லறை விற்பனை விதி மீறலுடன் ஜோராக நடக்கிறது.
இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:- போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை விடுவிக்கும் பொருட்டு, அரசு மருத்துவமனைகள் மூலம் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பழக்கம் உள்ளவர்களை அழைத்து வரும் பட்சத்தில் அங்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்களுக்கான 'கவுன்சிலிங்' வழங்கப்படுகிறது. இந்நிலையில், போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களைக் கண்டறிந்து அதிலிருந்து விடுவிக்கும் பணியில் ஈடுபட விருப்பமுள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.