நீலகிரி : உதகை மலை ரயில் போக்குவரத்துக்கு, சென்னை, ஐ.சி.எப்.,பில், நவீன ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உதகை - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும், பாரம்பரிய மலை ரயிலுக்கு சுற்றுலா பயணியர் மத்தியில், அமோக வரவேற்பு உள்ளது. இதனால், கூட்டம் காரணமாக அந்த ரயிலில் பயணிக்க முடியாமல், பலர் ஏமாற்றம் அடையும்நிலை உள்ளது.

இந்நிலையை தவிர்க்க உதகை மலை ரயில் போக்குவரத்துக்காக சென்னையில் ஒருங்கிணைப்பு ரயில் பெட்டி தொழிற்சாலையான ஐ.சி.எப்.,பில், 15 ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. உதகை மலை ரயிலில் தற்போது இணைத்து இயக்கப்படும் பெட்டியை விட இப்பெட்டிகள் நீளமாக வடிவமைக்கப்பட்டு வருகின்றன. அழகான உள்கட்டமைப்பு வசதியுடன் நவீன இருக்கை வசதிகள், இயற்கை காட்சிகளை முழுவதுமாக பார்த்து ரசிக்க வசதியாக, பெரிய கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
இதுவரை, முதல் வகுப்பு பெட்டி ஒன்று, இரண்டாம் வகுப்பு பெட்டி மூன்று, இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி ஒன்று என, ஐந்து பெட்டிகளின் தயாரிப்பு பணி முடிந்துள்ளது. இந்த பெட்டிகள், விரைவில் உதகைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. மீதமுள்ள, 10 பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் முடிந்ததும் உதகைக்கு அனுப்பப்பட உள்ளது.
மேலும், இந்த புதிய பெட்டிகள், மேட்டுப்பாளையம் - குன்னுார் இடையே நீராவி இன்ஜினில் இணைக்கப்பட்டும், குன்னுார் - உதகை இடையே, பயோடீசல் இன்ஜினில் இணைக்கப்பட்டும் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.