திருப்பூர் : சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி திருப்பூர் குமரனின் 87-வது நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

விடுதலை போராட்ட வீரர் தியாகி திருப்பூர் குமரனின் 87-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, திருப்பூர் குமரன் சாலையில் உள்ள குமரன் நினைவு இடத்தில், அவரது சிலைக்கு தியாகிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் தேசிய கொடியை கைகளில் ஏந்தியபடி, ஊர்வலமாகச் சென்று தியாகி திருப்பூர் குமரன் உயிர்நீத்த இடத்தில் உள்ள அவரது நினைவு தூண் இருக்கும் இடத்தில் ரோஜா மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில், ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.