நீலகிரி : கூடலுார், நாடுகாணி ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவர மையத்தில், 5 கி.மீ துாரம் வனத்தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலுார் வனக்கோட்டத்தில் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது. தொடர்ந்து செடிகள், தாவரங்கள் கருகி வருவதால் வனத்தீ அபாயம் ஏற்பட்டுள்ளது.
வனத்தீயை கட்டுப்படுத்த வசதியாக, கூடலுார் வனகோட்டத்தில் 25 கி.மீ துாரம் தீ தடுப்பு கோடுகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இதில், முதல் கட்டமாக நாடுகாணி ஜீன்பூல் சுழல் சுற்றுலா தாவர மையத்தில், 5 கி.மீ., துாரம் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியை வனத்துறையினர் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், "இதே போன்று மற்ற வனச்சரகங்களிலும் தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்படும். மேலும், வனத்தீயை தடுக்க பொதுமக்கள் எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். வனத்தீ குறித்த தகவல்களை வனத்துறைக்கு தெரிவிக்க வேண்டும்", என்றனர்.