கோவை : தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சர்க்கரை மட்டும் பெறும் குடும்ப அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ.1,000 வழங்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ. 1,000 பரிசுத் தொகையை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்பேரில், தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. அதில், தமிழக அரசுக்கு கடன் சுமை அதிகம் இருப்பதால், வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்குப் பொங்கல் பரிசு வழங்கத் தடை விதிக்க வலியுறுத்தப்பட்டது.
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசை வழங்க வேண்டும் என நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இதையடுத்து, அனைவருக்கும் வழங்க அனுமதிக்கக் கோரி தமிழக அரசு மனுதாக்கல் செய்தது. அந்த மனுவில், சர்க்கரை மட்டும் பெறும் குடும்ப அட்டை தாரர்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தினர் எனவும், 10 லட்சம் அளவில் உள்ள அந்த கார்டுகளில், ஏற்கனவே 4 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு வழங்கி உள்ளதாகவும், மீதமுள்ளவர்கள் வருத்தத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அவர்களுக்கும் பரிசுத் தொகை வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சர்க்கரை மட்டும் பெறும் குடும்ப அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ.1,000 வழங்க தமிழக அரசின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.