கோவை : சமூக நீதிக்காக போராடி வரும் கேரளா அரசிற்கு ஆதரவாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை : சமூக நீதிக்காக போராடி வரும் கேரளா அரசிற்கு ஆதரவாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தலித்துகள் உள்பட அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கியது, மனித கழிவுகளை அகற்ற இயந்திரங்களை பயன்படுத்தியது உள்ளிட்ட சமூகநீதிக்கான நடவடிக்கைகளில் கேரள அரசு இந்தியாவிற்கே முன்னுதாரணமாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இதனால், சங்பரிவாரம் உள்ளிட்ட இந்து அமைப்புகள் கேரள அரசிற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை, சாதிய ரீதியில் இழிவுப்படுத்தும் நடவடிக்கையில் சங்பரிவாரத்தினர் ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை வன்மையாகக் கண்டிக்கும் விதமாகவும், சமூகநீதியை நிலை நாட்டி வரும் கேரள அரசுக்கு ஆதரவு தெரிவித்தும், சங்பரிவாரம் அமைப்புகளைக் கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக, கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, கேரள அரசுக்கு ஆதரவாகவும், சங்பரிவாரம் அமைப்புகளுக்கு எதிராகவும் கோசங்கள் எழுப்பப்பட்டது.