திருப்பூர் : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அம்மாபட்டி, பெரியகோட்டை உள்ளிட்ட கிராமங்களில் சலங்கை மாடு, தேவர் ஆட்டம், பெண்கள் கும்மிப்பாட்டு பாடியும் பொங்கல் விழாவை சிறப்பித்து வருகின்றனர்.

உடுமலை அருகே உள்ள பெரியகோட்டை ஊராட்சியில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு, வீரபாண்டிய கட்டபொம்மன் அமைப்பினர் சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மார்கழி, தை மாதங்களில் இரவு நேரத்தில் தாங்கள் தெய்வமாக வணங்கும் மாடுகளுடன் ஆட்டம் ஆடி மகிழ்கின்றனர்.

இதை தலைமுறை தலைமுறையாக கடைப்பிடித்து வருவதாகவும், தங்கள் குழந்தைகள் வேலை மற்றும் படிப்பதற்கு வெளி ஊர்களில் இருந்தாலும், இந்த நாட்களில் சொந்த ஊர்களுக்கு வந்து விடுவதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சலங்கை மாடு ஆட்டம் ஆடுவதாகவும், இதேபோல், தேவர் ஆட்டம் உருமி அடித்தல், பெண்கள் கும்மிப்பாட்டு அடித்து பொங்கல் திருநாட்களில் வீரபாண்டிய கட்டபொம்மனின் புகழை பாடி மகிழ்வதாவும் கூறுகின்றனர்.
சுவாமிக்கு நேர்த்தி கடனாக வழங்கும் மாடுகளை அமராவதி வனச்சரகத்தில் வாழும் மலைவாழ் கிராமத்தில் வளர்ப்பதற்காக மலைவாழ் மக்களிடம் விட்டு விடுகின்றனர். பின்னர், மார்கழி மாதம் பிறந்தவுடன் மாடுகளைப் பிடித்து வந்து ஊருக்குள் விடுகின்றனர். இந்த சலங்கை மாடுகளுக்கு பொங்கல் திருவிழா முடிந்ததும், பால் மற்றும் பழங்கள் வைத்து சுவாமி கும்பிடுவதாகவும், அதை முழுவதும் அந்த மாடுகள் முழுமையாக சாப்பிட்ட பின்னர், ஊர் மக்கள் ஒன்றுகூடி மாடுகளை மலைகிராமங்களில் விட்டு விடுவதாகவும் சொல்கின்றனர்.

அடுத்த பொங்கல் திருவிழா வரும் போது மக்கள் அலைத்து வந்து வழிபாடு செய்வதாகவும் கூறுகின்றனர். ஒருவேளை படைக்கப்பட்ட பால் மற்றும் பழங்களை மாடுகள் சாப்பிடாமல் விட்டால், அவற்றை ஊருக்குள்ளேயே விட்டு விடுவதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர். மாடுகளை துன்புறுத்தாமல், அதனை தெய்வமாக பாவித்து வழிபடுகின்றனர்.
இதனை வருடந்தோறும் அம்மாபட்டி, பெரியகோட்டை உள்ளிட்ட கிராம மக்கள் தவறாமல் செய்து வருவதாகவும், இதனால், தங்கள் குழந்தைகள் குடும்பங்கள் விவசாயம் செழிப்பாக அமையும் என அவர்கள் நம்புகின்றனர். மேலும், தங்களது முன்னோர்கள் மற்றும் வம்சத்தின் பெருமைகளை பெண்கள் அனைவரும் கும்மிப்பாட்டு பாடி, அதன் மூலமாக, சிறிய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் தெரியப்படுத்துகின்றனர்.
இந்த இரண்டு மாதங்களும் அக்கிராம மக்கள் மகிழ்ச்சி பொங்க ஊர்மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.
கிராம மக்கள் தங்களது கால்களின் சலங்கை கட்டி, தடி எடுத்து ஆடும்போது, மாடுகளும் இணைந்து ஆடுவது பார்ப்பதற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. தேவர் ஆட்டத்தில் இருக்கும் அனைத்து ஆட்டங்களையும், தங்கள் குழந்தைகளுக்கு கற்றுத்தருவதாகவும், தாங்கள் அழிந்தாலும் எங்கள் கலை அழியக் கூடாது என அக்கிராம மக்கள் கூறுகின்றனர்.
இதைப்புரிந்து கொண்டு, ஜல்லிக்கட்டிற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்த போது, ஜல்லிக்கட்டு போட்டிக்கு நிரந்தரமாக அனுமதி கிடைக்கும் வகையில், மத்திய அரசு சட்டம் கொண்டு வர இக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல, பெரியகோட்டை மற்றும் உடுமலை சுற்றுவட்டாரங்களில் உள்ள பல கிராமங்களில், பொதுமக்கள் பொங்கலை கொண்டாடி, அவர்களின் பாரம்பரியங்களை அழியாமல் பாதுகாத்து வருகின்றனர்.