கோவை : கோவை விழா 2019-ன் ஒரு பகுதியாக நடைபெற்ற பறவைகள் பார்வையிடுதல் மற்றும் கணக்கெடுப்பு நிகழ்ச்சியில் 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

கோவையின் சிறப்பை விளக்கும் வகையில், 11-வது கோவை கடந்த 4-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை வரை நடக்கும் இந்த திருவிழாவில், பறவைகள் பார்வையிடுதல் மற்றும் கணக்கெடுப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதில், ஏ.வி.சி. கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். அதிகாலை சுமார் 6.45 மணியளவில், தங்களது பயணத்தை தொடங்கிய இந்த குழு, பாரதியார் பல்கலைக்கழகத்தை சுற்றியுள்ள வனப்பகுதி மற்றும் மருதமலை வனப்பகுதிகளில் பார்வையிட்டனர்.
இந்த பயணத்தின் போது, செம்புழைக் கொண்டலாத்தி (red vented bull-bull), அரசவால் ஈப்பிடிப்பான் (Asian paradise flycatcher), பஞ்சுருட்டான் (bee-eater), தேன்சிட்டு (purple sun-bird) உள்ளிட்ட 55-க்கும் மேற்பட்ட பறவைகளை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். இந்த நிகழ்ச்சியில், பறவைகள் ஆர்வலர் பிரசாத், மாணவர்களிடம் பறவைகளைப் பற்றி விளக்கிக் கூறினார்.