கோத்தகிரியில் மரத்தில் குட்டி தூக்கம் போட்ட குட்டிக் கரடி : பொதுமக்கள் பீதி

நீலகிரி : கோத்தகிரியில் மரத்தின் மீது ஏறி தூங்கிய குட்டிக் கரடியை கண்டு அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.

நீலகிரி : கோத்தகிரியில் மரத்தின் மீது ஏறி தூங்கிய குட்டிக் கரடியை கண்டு அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக, கரடி, காட்டெருமை, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதில், பொதுமக்களுக்கு அதிகம் இன்னல்களைக் கொடுக்கக்கூடிய விலங்காக கரடிகளே உள்ளன. தேயிலைத் தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகள் என பொதுமக்கள் வாழும் இடங்களில் அதிகம் நடமாடுவதால், உயிர்பீதி ஏற்படுகிறது. 



இந்த நிலையில், கோத்தகிரி அருகே உள்ள எம். கைகாட்டி பகுதியில் குட்டிகளுடன் கரடி ஒன்று சுற்றித் திரிந்துள்ளது. இதில், குட்டி கரடி ஒன்று மரத்தின் மேல் ஏறி உறங்கிவிட்டது. இதனால், தாய்கரடி அங்கு சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள், வனத்துறைக்கு தகவல் அளித்தனர். ஆனால், சம்பவ இடத்திற்கு வனத்து‌றையினர் வருவதற்குள், கரடி தனது குட்டிகளுடன் தேயிலை தோட்டத்திற்குள் சென்று விட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...