கோவை: கோவை பாப்பம்பட்டி அருகே தொழிலாளர் அலுவலர், ஆய்வு செய்ய சென்ற நிறுவன உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கும் பொழுது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக பிடிபட்டதை அடுத்து கைது செய்யப்பட்டார்

கோவை பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் பன்னீர் செல்வம் என்பவர் தெய்வம் காளிபிரேஷன் அக்கியூரசி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். பாப்பம்பட்டி, சூலூர் போன்ற பகுதிகளுக்கு ஆய்வு செய்ய போகும் தொழிலாளர் துணை ஆய்வாளர் விஜயலட்சுமி 57, பன்னீர்செல்வம் அலுவலகத்திற்கத்திலும் அடிக்கடி ஆய்வு மேற்கொள்வது வழக்கம். விஜயலட்சுமி ஆய்வு மேற்கொள்ள வரும்பொழுதெல்லாம் பன்னீர்செல்வத்திடம் லஞ்சம் கேட்டு வற்புறுத்தியுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் ஆய்வு செய்த விஜயலட்சுமி, லஞ்சம் கேட்டு கட்டாயப்படுத்தியதால், ரூ.11,200 பணத்தை தர பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்டார். லஞ்சம் தர விருப்பம் இல்லாத பன்னீர்செல்வம், இந்த விவரம் தொடர்பாக கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை பன்னீர்செல்வத்திடம் கொடுத்தனர். அந்த நிறுவனத்திற்கு வந்த தொழிலாளர் துணை அலுவலர் விஜயலட்சுமியிடம், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழங்கிய ரூ.11,200 ரசாயனம் தடவிய பணத்தை பன்னீர்செல்வம் அளித்துள்ளார். அதை விஜயலட்சுமி வாங்கி வைத்துக் கொண்டார். இதை அங்கு மறைந்து இருந்த கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்சம் வாங்கிய விஜயலட்சுமியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.