திருப்பூரில் பால்பண்ணை கட்டுமான பணி தொடர்பாக இந்து முன்னணியினருக்கும் பொதுமக்களிடையே கைகலப்பு; போலீசார் தடியடி

திருப்பூர்: திருப்பூரில் ஊதியூர் உத்தண்ட வேலாயுதசாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் தனியார் பால்பண்ணை நிறுவனம் கட்டுமான பணிகளை மேற்கொள்வதை கண்டித்து வழிபாடு நடத்த சென்ற இந்து முன்னணியினரை கண்டித்து ஊர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனை தடுக்க போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

திருப்பூர்: திருப்பூரில் ஊதியூர் உத்தண்ட வேலாயுதசாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் தனியார் பால்பண்ணை நிறுவனம் கட்டுமான பணிகளை மேற்கொள்வதை கண்டித்து வழிபாடு நடத்த சென்ற இந்து முன்னணியினரை கண்டித்து ஊர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனை தடுக்க போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். 



திருப்பூர் மாவட்டம் ஊதியூரில் உள்ள உத்தண்ட வேலாயுத சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் ஹட்சன் என்ற தனியார் பால்பண்ணை கட்டுமான பணிகளை மேற்கொண்டது. இதனை இந்து அறநிலையத்துறை சார்பில் நீதி மன்றத்தில் கட்டுமான பணிகளுக்கு தடை விதித்தது.

இதனையடுத்து பால்பண்ணை நிறுவனம் சார் ஆட்சியர் உத்திரவின் பேரில் மீண்டும் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. இதனை தடுத்து நிறுத்தகோரி இந்து முன்னணனியினர் இன்று மலைக்கோவில் மீது விளக்கேற்றி வழிபடும் போராட்டம் நடத்த வந்தனர். இதனை கண்டித்து பால் பண்ணைக்கு ஆதரவாக திரட்டப்பட்ட மக்கள் இந்து முண்ணனியினரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டதோடு இந்து முன்னனியினரை கண்டித்து கோசங்கள் எழுப்பியதால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.



இதனை தடுக்க போலீசார் முயன்றும் கட்டுப்படுத்த முடியாததால் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் காங்கயம் பழனி சாலையில் 1 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரு தரப்பினர் மீதும் சாலை மறியலில் ஈடுபட்டதற்காகா 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கார் கண்ணாடிகளை உடைத்த 5 பேர் கைது செய்து ஊதியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி பார்வையிட்டு பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து தொடர்ந்து 5 நாட்களுக்கு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உத்திரவிட்டார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...