அட்ராசக்க..! பொங்கல் "லீவ்" எத்தனை நாள் தெரியுமா?

கோவை: பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வரும் திங்களன்றும் விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு.

கோவை: பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வரும் திங்களன்றும் விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு.

தமிழகத்தில் வரும் 15 முதல் 17-ம் தேதி வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக அரசு பணியாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

பொங்கல் பண்டிகை செவ்வாய் கிழமை வருகிறது. முன்னதாக வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளும் வருகின்றன.

ஆனால் இடைப்பட்ட ஒரு நாள், அதாவது திங்கட்கிழமை போகி அன்று விடுமுறை அறிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக சொந்த ஊர்களுக்கி செல்லும் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் குழப்பமடைந்தனர்.

மேலும், "திங்கட்கிழமையும் லீவ் விட்டிருக்க கூடாதா" என்று பலரும் ஏங்கிக்கொண்டிருந்தனர். மக்களின் ஏக்கம் அரசுக்கு புரிந்ததோ என்னவோ? திங்கட்கிழமையை விடுமுறை தினமாக அறிவித்துள்ளது தமிழக அரசு.

ஆனால், இந்த விடுமுறை தினத்திற்கு பதிலாக வரும் பிப்ரவரி 9-ம் தேதி பணி நாளாகவும் அறிவிக்கப்பட்டது.

இதன் மூலமாக, பொங்கலுக்கு தொடர்ந்து ஆறு நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.

இதனால், நாளை வெள்ளிக்கிழமையன்று பணி மற்றும் வகுப்புகளை முடித்த கையோடு சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாவுக்கும் புறப்பட தயாராகிவிட்டனர் நம் மக்கள்.

தொடர்ந்து ஆறு நாட்களோடு போனதா? இல்லவே இல்லை.. அடுத்து வரும் வெள்ளியன்று பணி முடித்தால் மேலும் இரண்டு நாட்களும் விடுமுறை தான்.

மொத்தத்தில் உழைத்து அலுத்துப் போன உள்ளங்களுக்கு இந்த பொங்கல் "அட்ராசக்க" பொங்கல் தான்.

எத்தனை பேர் வெள்ளிக்கிழமையும் லீவ் போடப்போறாங்களோ அவர்களுக்கு "ஜாக்-பாட்" தானே!

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...