கோவை: பொங்கல் பண்டிகையையொட்டி வரும் தொடர் விடுமுறைகளால் ஏற்படும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி கைவரிசை காட்டும் திருடர்களிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வரும் ஜனவரி 15 ம் தேதி முதல் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது கொண்டாடப்பட உள்ளது. இதனால் நாளை மாலை முதல் கோவையிலிருந்து தங்களின் சொந்த ஊருக்கு செல்லக்கூடியவர்கள் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களிலிருந்து செல்வார்கள். இதனால் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் கூட்டம் அலைமோதும்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, பயணிகளின் உடைமையை அபகரிக்க நினைக்கும் கொள்ளைக் கும்பலிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக காந்திபுரத்தில் உள்ள உள்ளூர் பேருந்து நிலையம் மற்றும் வெளியூர் பேருந்து நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம், டவுன்ஹால், உக்கடம், கோவை மத்திய ரயில் நிலையம், போத்தனூர் சந்திப்பு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
அதேபோல வெளியூர் செல்லும் பயணிகள் தங்களின் உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். இரவு நேரங்களில் வெளியூர் செல்பவர்கள் கண்ணைப் பறிக்கும் அளவிற்கு தங்கச் சங்கிலிகளை அணிந்து செல்வதை தவிர்ப்பது பாதுகாப்பானது என காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.