பங்களோரை பகுதியில் ஓடையைத் தூர்வார விவசாயிகள் கோரிக்கை

நீலகிரி : கோத்தகிரி பங்களோரை பகுதியில் தூர்வாரப்படாமல் ஓடை சுருங்கி வருவதால், ஓடையை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி : கோத்தகிரி பங்களோரை பகுதியில் தூர்வாரப்படாமல் ஓடை சுருங்கி வருவதால், ஓடையை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கோத்தகிரி பில்லிக்கம்பை, ஒன்னதலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அதிக பரப்பளவில் மலை காய்கறி பயிரிடப்படுகிறது. இப்பகுதி விவசாயிகள் பெரும்பாலும் பங்களோரை - குடிமனை இடையே செல்லும் ஓடையை நம்பியே, மலை காய்கறிகளான கேரட், பீட்ரூட், பீன்ஸ், உருளைக்கிழங்கு மற்றும் கீரை வகைகளைப் பயிரிட்டு பராமரித்து வருகின்றனர். 



இந்த ஆண்டு இப்பகுதியில் அதிக பரப்பளவில் கேரட் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ஓடை துார்வாரப்படாமல் உள்ளது. இதனால், செடிகள் மற்றும் புற்கள் முளைத்து, ஓடையின் ஆழம் மற்றும் அகலம் குறைந்துள்ளது. இதனால், ஓடையில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. 

தற்போது, பனிப்பொழிவுடன், பகல் நேரங்களில், கடுமையான வெயில் அடிப்பதால் எதிர்வரும் நாட்களில், தண்ணீர் அளவு மேலும் குறைய வாய்ப்புள்ளது. அத்துடன், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அறுவடை செய்யவுள்ள தோட்டங்களில் மீண்டும் பயிர் செய்வதில் சிக்கல் அதிகரித்துள்ளது. 

எனவே, ஓடையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இப்பகுதியில் தண்ணீர் பாய்ச்ச அமைக்கப்பட்டுள்ள மோட்டார் செட்டும் பாராமரிக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதேப் போன்று கட்டபெட்டு குடிமனைப் பகுதியில் உள்ள தண்ணீர் இரைக்கும் மோட்டார் பம்ப் செட்டையும் சீரமைக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...