குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய திருப்பூர் எம்.பி சத்தியபாமா

ஈரோடு : பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் பக்தர்களுடன் எம்.பி சத்தியபாமாவும் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்.

ஈரோடு : பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் பக்தர்களுடன் எம்.பி சத்தியபாமாவும் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள பாரியூரில் சுமார் 700 ஆண்டுகள் பழமையான பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு கடந்த மாதம் பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. இன்று காலையில் குண்டம் திருவிழா தொடங்கியது. பூச்சாட்டுதலில் இருந்து 15 நாட்கள் விரதமிருந்து, குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்துவதற்காகக் கோபி மட்டுமின்றி, ஈரோடு, கரூர், நாமக்கல், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்றனர்.

இதையடுத்து, இன்று காலை அம்மை அழைத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து நந்தா தீபமும், திருக்கோடியும் ஏற்றப்பட்ட பின்னர் தலைமை பூசாரி குண்டத்திற்கு சிறப்பு பூஜை செய்து முதலில் குண்டம் இறங்கினார். அதைத் தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.



இந்நிலையில், இன்று அதிகாலையில் திருப்பூர் எம்.பி சத்தியபாமா தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார். அரசு உயர் அதிகாரிகள், காவல்துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் தீக்குண்டம் இறங்கினர். தமிழகத்திலிருந்து மட்டுமின்றி கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் பங்கேற்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...