நீலகிரியில் நிலவும் கடும் குளிரினால் தீவனம் கிடைக்காமல் தவிக்கும் கால்நடைகள்

நீலகிரி : நீலகிரியில் கடும் குளிரினால் புற்கள் கருகுவதால் ஆடு, மாடு போன்ற கால் நடைகளுக்கான தீவனம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி : நீலகிரியில் கடும் குளிரினால் புற்கள் கருகுவதால் ஆடு, மாடு போன்ற கால் நடைகளுக்கான தீவனம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக கடும் உறைபனி நிலவுவதால் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் குளிர் காணப்படுகிறது. விவசாய நிலங்களில் விளையும் காய்கறிகள் மற்றும் தேயிலைச் செடிகள் என அனைத்தும் பனி பொழிவு காரணமாக கருகும் நிலை ஏற்பட்டது. 



இதையடுத்து, இதை பாதுகாக்கும் வகையில் விவசாயிகள் ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் கொண்டு பாதுகாத்து வருகின்றனர். மேலும், பனி பொழிவு அதிகம் காணப்படுவதால் புல்வெளிகள் கருகி உள்ளதால் இங்கு இயற்கையாக வளரும் புற்களை உணவாக உண்டு வாழும் கால் நடைகள் போதிய உணவு கிடைக்காமல் உள்ளது. 

தொடரும் பனி பொழிவு காரணமாக வனப்பகுதிகள், தாவரங்கள் பெருமளவு கருகும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. அதே நேரம் புற்கள் பற்றாக் குறைகாரணமாக கடைகளில் தீவனங்களை வாங்கி கால்நடைகளுக்கு வழங்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகக் கால்நடை வளர்ப்போர் கூறியுள்ளனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...