இன்று வெளியான பேட்ட திரைப்படத்தை தமிழ்ராக்கர்ஸ் வெளியிட்டு படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பேட்ட. நடிகர் ரஜினி நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்தக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனிடையே, பேட்ட படத்தை இணையதளம் மற்றும் கேபிள்களில் வெளியிட தடைக்கோரி சன் நெட்வொர்க் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர் இந்த படத்தை இணைதளம் மற்றும் கேபிள்களில் சட்ட விரோதமாக வெளியிட தடை விதித்திருந்தார்.
இந்நிலையில், படம் வெளியான முதல் நாளன்றே பேட்ட திரைப்படத்தை தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் சட்டவிரோதமாக வெளியிட்டுள்ளது. இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.