பொங்கலுக்கு 6 நாட்கள் விடுமுறை : ஜனவரி 14 -ம் தேதி அரசு விடுமுறையாக அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 -ம் தேதி அரசு விடுமுறையாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 -ம் தேதி அரசு விடுமுறையாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 -ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஏற்கெனவே ஜனவரி 15 மற்றும் 16, 17 ஆகிய தேதிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப் போல, 12 மற்றும் 13 -ம் தேதிகளும் சனி மற்றும் ஞாயிறு ஆக உள்ளதால் பெரும்பாலான பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் அலுவலகங்கள் விடுமுறை அறிவித்துள்ளன. 

இந்நிலையில், ஜனவரி 14 -ம் தேதி மட்டும் விடுமுறை இல்லாமல் இருந்தது. வெளியூர்களில் இருப்பவர்கள் பொங்கலுக்கு சொந்த ஊர் சென்று வர வசதியாக, ஜனவரி 14 -ம் தேதியான போகிப் பண்டிகை அன்று தமிழகத்தில் அரசு விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், 12 -ம் தேதி முதல் 17 -ம் தேதி வரை 6 நாட்கள் பொங்கலுக்கு விடுமுறை ஆகும். 

மேலும், ஜனவரி 14 -ம் தேதி விடுமுறையை ஈடுசெய்ய, வரும் பிப்ரவரி 9 -ம் தேதி பணி நாளாக இருக்கும் என தமிழக அரசு அறிவிப்பாணையில் தெரிவித்துள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...